விசுவமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது விசுவமடு - கண்ணகி நகர் பகுதியில் இன்று (3) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், கண்ணகி நகர் பகுதியினை சேர்ந்த 43 வயதுடைய குமாரசாமிபுரம் பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசேந்திரம் கௌதமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதி கைது
கண்ணகி நகர் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தரை தர்மபுரம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்
மேலும், உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பேருந்தின் சாரதி தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri