புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாக்கப்பட்ட குடும்பஸ்தர்: வெடித்த போராட்டம்
வவுனியா (Vavuniya), புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் குடும்பஸ்தர் ஒருவரை தாக்கிய நபரை கைது செய்யுமாறு அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம், கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று (06.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையை புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் பிடித்து வைத்துள்ளனர்.
எழுப்பப்பட்ட கோசங்கள்
இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து அவரை தாக்கியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு நியாயம் கோரியே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நபர் உட்பட 40இற்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் 'பொலிஸார் பக்கசார்பாக செயற்படாது குற்றவாளியை கைது செய்', 'பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே', 'பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்' என பல்வேறு கோசங்களை எழுப்பியுள்ளனர்.
வழங்கப்பட்ட உறுதி
இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 10 பேரை அழைத்து பேசியிருந்தார்.
இதன்போது, பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
