புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட திராய்மடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - திராய்மடு மூன்றாம் குறுக்கு வீதியில் வசிக்கும் செல்லையா அசோக்குமார் எனும் 43 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேநேரம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் பணிப்புரைக்கு அமைய களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தைப் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் விசாரணைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam