மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று(02) அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணி
சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் சென்று பார்வையிட்டு படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
