வீட்டில் இருந்த குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு- பொதுமக்கள் கவலை
பொலன்னறுவை - இங்குராகொடை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(16.02.2026) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் இங்குராகொடை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை ஆரம்பம்
நேற்று(17) மேற்படி நபர் தனது வீட்டின் அருகே இருந்த போது, அங்கு ஊடுருவிய காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தப் பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டூழியங்கள் குறித்துப் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை முறையான தீர்வுகள் எட்டப்படவில்லை எனப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.