முல்லைத்தீவில் உயிரிழந்த குடும்பபெண் : விசாரணையை முன்னெடுத்த நிர்வாகம்
கடந்த 30.09.2025 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியினை சேர்ந்த இரண்டுமாத பிள்ளையின் தாயாரான குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் விசாரணைகளை ஆராம்பித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் வைத்தியர் நளின்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக இரத்தினம் ஜெகதீசன் கடந்த (06.10.2025) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர் ஊடக சந்திப்பை மேற்கொண்டார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் நேற்று (08) ஊடகங்களை அழைத்து கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மருத்துவ அறிக்கை
அதில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் நளின் பிரேமதாச மற்றும் நோயாளர் நலன்புரி சங்க உறுப்பினர் தி.ரவீந்திரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

வற்றாள்பளையினை பிறப்பிடமாகக் கொண்ட இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது மாவட்டத்தில் வேதனைக்குரிய சம்பவம் உயிரிழந்த பெண்ணின் உறவு முறையானவர்கள் வைத்தியரின் அசண்மைடயீனத்தில்தான் தனது மருமகள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பணிப்பாளருடனும் சம்மந்தப்பட்டவர்களிடம் கதைத்துள்ளோம்.
இதன் பின்னர் பணிப்பாளர் அவர்கள் மருத்துவ அறிக்கையினை காட்டி நோயாளியினை வைத்தியசாலைக்கு கொண்டுவர காலதாமதம் ஆகிவிட்டது என கூறினார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை சட்டரீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வைத்திய அதிகாரிகள் இல்லாத நிலை
விசாரணை முடிவில் எந்த அதிகாரியோ அல்லது எவராக இருந்தாலும் தகுந்த சட்டநடடிக்கை எடுக்கப்படும் என நோயாளர் நலன்புரி சங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிலவும் வைத்தியர் மற்றும் ஆளணி பற்றாக்குறை தொடர்பிலும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கருத்தில் எடுத்து அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களை மாவட்ட மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அந்தந்த பிரிவிற்குரிய வைத்தியர்களை இந்த மாவட்ட மருத்துவமனைக்கு வழங்கவேண்டும் என்றும் நோயாளர் நலன்புரி சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவனையில் சட்டவைத்திய நிபுணர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான வைத்திய அதிகாரிகள் இல்லாத நிலை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam