யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்பஸ்தர்
யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோபால் புஸ்பராசா என்ற வயது 65 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சில காலங்களுக்கு முன்னர் கீழே விழுந்த நிலையில் இரண்டு கால்களிலும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவருக்கு கண் வலியும் காணப்பட்டுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் இரண்டு வலிகளும் தாங்க முடியாத நிலையில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri