பொல்லால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலை
குருநாகல்(Kurunegala) பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் வாரியப்பொல, தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.
எல்லை மீறிய தகராறு
மேற்படி நபர் இளைஞர் ஒருவருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
குறித்த தகராறு எல்லை மீறியதில் இளைஞர், மேற்படி நபரைப் பொல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து சந்தேகநபரான 30 வயதுடைய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
