முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் கைது
முல்லைத்தீவு- உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(2) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோத இடியன் துப்பாக்கியை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.
கைது
குறித்த சம்பவத்தில் இருட்டுமடு பகுதியில் வசிக்கும் 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam