யாழில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்றையதினம் (22.11.2024) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் நேற்று காலை தனது வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேளை திடீரென மயக்கமுற்றுள்ளார்.
மாரடைப்பு
இந்நிலையில், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதோடு மாரடைப்பினால் அவரது மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan