மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணம்
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
காட்டு யானைகளின் அட்டகாசங்கள்
கருங்கல் உடைக்கும் இடத்தில் இருந்தபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி அவர் உயிரிழந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் மிக நீண்டகாலமாகவே காட்டுயானைகளின் அட்டகாசங்கள், அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri

அமெரிக்காவின் வரி விதிப்பு... முதல் முறையாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க் News Lankasri
