யாழில் பேருந்து மோதியதில் குடும்பஸ்தர் பலி
யாழில் பேருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 3ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் மோட்டார் சைக்கிளில் இன்றையதினம் (17.10.2025) யாழ்ப்பாணத்தில் இருந்து அல்லைப்பிட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
மரண விசாரணைகள்
இதன்போது, பின்னால் வந்த பேருந்து மண்டைதீவு சந்திக்கு அருகாமையில் அவர்மீது மோதியது. இதன்போது, அவர் அதிலேயே மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



