கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! - வவுனியாவில் சம்பவம்
வவுனியா - நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா - சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ரமேஸ் (வயது- 34) இரண்டு பிள்ளைகளின் தந்தை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையில் சிற்றுாழியராக கடமையாற்றி வருகின்றார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இவர், இரவு 8 மணியளவில் குளித்துவிட்டு வருவதாக வீட்டிலுள்ள வயல் கிணற்றுக்கு சென்றுள்ளார் .
எனினும் பல மணி நேரமாகியும் அவர் அங்கிருந்து திரும்பிவரவில்லை. தேடிப்பார்த்தபோது அவரைக்கண்டு பிடிக்க முடியவில்லை. அயலவர்களின் , உதவியுடன் கிணற்றில் தேடியபோதும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றிலிருந்த இறைக்கப்பட்ட நிலையில் நேற்று (06) இரவு 11 மணியளவில்குறித்த குடும்பஸ்தரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும் குளித்துக்கொண்டிருந்தபோது, வலிப்பு ஏற்பட்டு கிணற்றிற்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
