கந்தளாயில் மின்னல் தாக்கி இருவர் காயம்
கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பகுதியில் மின்னல் தாக்கியதில் தாயும் மகனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதுடன் ஆறு தென்னை மரங்கள் பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (11.10.202) மாலை இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கச்சி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் அப்பகுதி வீடுகளிலிருந்த மின் உபகரணங்கள் சேதமாகி உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மின்னல் தாக்கம்
கடந்த நான்கு மாதத்திற்கு முன்னரும் இப்பகுதியில் மின்னல் தாக்கத்தினால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது தாயும் மகனும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்திற்கு கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த சேவை பிரிவினர் சென்று பார்வையிட்டதாகவும் சேத விபரம் தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் பாரிய பண மோசடிகள்! மக்களுக்கு பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரப்போகும் சூப்பர் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா, ரசிகர்கள் ஷாக் Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri