மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்: வீட்டின் உரிமையாளரை கைது செய்ய உத்தரவு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரை உடன் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஒட்டுசுட்டானில் வீடொன்றுக்கு முன்பாகத் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய சமயம் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம் தொடர்பிலேயே வீட்டின் உரிமையாளரைக் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான், முத்து விநாயகபுரம் பகுதியில் இரண்டு வேட்பாளர்களின் விளம்பர சுவரொட்டிகளைக் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு ஒட்டியபோது வீட்டின் முன்பாக அமைத்திருந்த யானை வேலியின் மின்சாரம் தாக்கியுள்ளது.
வீட்டின் உரிமையாளர் கைது
மின்சார தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் ஆராய சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த யானை வேலியைப் பார்வையிட்ட பின்னர் வீட்டின் உரிமையாளரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
