குற்ற புலனாய்வு பிரிவினரின் திடீர் சோதனையில் சிக்கிய குடும்பம்! தந்தை தப்பியோட்டம்
போலி நாணயங்களை விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பொலன்னறுவை குற்ற புலனாய்வு பிரிவினரால்(Criminal Investigation Department) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் புதையலிலிருந்து எடுக்கப்பட்ட பெறுமதியான தங்க நாணயங்கள் எனக் கூறி மணம்பிட்டிய மாகங்தொட்ட பிரதேசத்தில் ஒருவருக்கு 810 போலி நாணயங்களை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
குற்ற புலனாய்வு பிரிவினரால் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது, தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தந்தை தப்பியோட்டம்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலன்னறுவை கல்குவாரி பகுதியில் வசிக்கும் 47, 23 மற்றும் 18 வயதுடைய தாய், மகள் மற்றும் மகன் எனவும், இவர்கள் போலி தங்க நாணயங்களுடன் கைது செய்யப்பட்ட போது தந்தை தப்பியோடிவிட்டதாகவும் பிரதேச குற்ற புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சோதனையின் போது தங்க நாணயங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட தராசு மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |