இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டு
இலங்கை கடற்றொழிலாளர்கள் எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது பொய்யான விடயம் ஆகும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாற குறிப்பிட்டுள்ளார்.
கெடுதலான செயல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரலாற்றிலே இதுவரையில் எங்களது கடற்றொழிலாளர்கள் எல்லைத்தாண்டி சென்று எந்த கெடுதலான செயலும் செய்தது இல்லை.
சமீபத்திலே ஜெயசங்கர் இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே ஒரு பேச்சு வார்த்தைதை நடாத்தி நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் என்பதிலே முனைப்பாக இருக்கிறார். அத்தோடு அண்ணாமலை அவருடன் இணைந்து செயற்படுவது வரவேற்கதக்க விடயம்.
இந்தியா 2016ஆம் ஆண்டு எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலே பேசும் அதை பேசினால் இழுவைமடி தொழிலுக்கு பங்கம் வரும் என்ற சந்தேகத்தை கொண்ட சில இழுவைமடி உரிமையாளர்கள் இந்த பேச்சுவார்த்தையை முறியடிக்க இரகசிய சதி திட்டம் வகுக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு பொய்யான தகவலை வழங்கி பேச்சு வார்த்தையை முறிக்க வேண்டாம் இதனை தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இலங்கை எல்லையை விடுத்து உங்கள் அருகாமையில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் மீன்பிடித்து பாருங்கள். அங்கே உங்களளால் சவால் விட முடியாது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |