நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் : கூரையில் இருந்து விழுந்து படுகாயம்
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் முற்பட்டபோது வீட்டின் கூரைமேல் ஏறி தப்பிச் செல்ல முற்பட்ட போது கூரையில் இருந்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர் மீது பதியப்பட்ட வழக்கொன்றில் நீதிமன்ற கட்டளையின்படி பணத்தை செலுத்தாமல், வழக்கு தவளைகளுக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக திருகோணமலை
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ய சென்ற போது பொலிஸாரை கண்டு கதவை மூடி விட்டு கூரை மேல் ஏறி தப்பிச் செல்ல முற்பட்ட போது கூரையிலிருந்து வீழ்ந்து கால் மற்றும் பல் உடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும், குறித்த நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.