யாழில் மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
யாழ். மாவட்டத்தின் (Jaffna District) பல்வேறு பகுதிகளிலும் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதிக மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றது.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை
யாழ்ப்பாணம் (Jaffna )- திருநெல்வேலி (Tirunelveli) சந்தையில் நிலவரத்தின்படி,
கத்தரிக்காய் கிலோ 140 ரூபாவாகவும், பாகற்காய் கிலோ 200 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 120 ரூபாவாகவும், கோவா கிலோ 120 ரூபாவாகவும், வெண்டிக் காய் கிலோ 60 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
பூசணிக்காய் கிலோ 120 ரூபாவாகவும், பச்சைமிளகாய் கிலோ 140 ரூபாவாகவும், தக்காளிப்பழம் கிலோ 120 ரூபாவாகவும், மரவள்ளிகிலோ 100 ரூபாவாகவும். கீரை ஒரு பிடி 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
