தனியார் வங்கியின் போலி இணையதளம் மூலம் பெருந்தொகை பணம் மோசடி
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரபூர்வ இணையதளத்தை போலவே போலியான இணையதளம் ஒன்றை உருவாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இணையத்தளம் மூலம் 1,000,024(பத்து இலட்சம்) ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பெருந்தொகை பணம் மோசடி
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொட பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 23 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri