கோட்டாபய கிடப்பில் போட்ட சுரேஷ் சலேவுக்கு எதிரான முறைப்பாடுகள் : ஐந்து வருடங்களின் பின்னர் விசாரணைக்கு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சுரேஷ் சலே மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவிலுள்ள சிலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் ஐந்து வருடத்திற்கு பின்னர் நேற்று(20) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் வாக்கு மூலம் பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரந்த அமரசிங்க சிவில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திற்கு சென்று வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடரந்துரையாற்றிய அவர்,
ஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட முறைபாடுகள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சுரேஷ் சலே மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவிலுள்ள ஒரு குழு சம்பந்தப்பட்டுள்ளது என 2021.11.15 நான் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தேன்.
ஆனால் அது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் கோட்டாபய ஆட்சியிலும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் நடத்தவில்லை.
அது தொடர்பில் என்பிபி அரசாங்கம் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு ஆரம்பித்துள்ளமை பாராட்டத்தக்கது.கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் எதுவும் செய்யவில்லை.
சாட்சியங்கள் உறுதியானதால் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தை முடிவுறுத்த முடியாது என்பதால் கண்டுகொள்ளவில்லை.

இதற்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் அனைவரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதல்ல.சுரேஷ் சலேவுடன் இருந்த சிறு குழுவினரே சம்பந்தப்பட்டுள்ளனர்.
இது புலனாய்வு பிரிவில் உத்தியோகப்பூர்வமற்ற செயற்பாடா? என கேட்க விரும்புகிறோம். சுரேஷ் சலேவுக்கு எதிராக சாட்சியங்கள் சொல்வோருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் என சொல்லிக் கொள்பவர்கள் அச்சுறுத்தல் செய்ய முயற்சிக்கின்றனர்.
சுரேஷ் சலேவை கைது செய்த பின்னர் ஏன் புலனாய்வு பிரிவினர் இவ்வளவு பதற்றத்திற்குள்ளாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 17 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri