போலி பொலிஸார் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பில் பல பகுதிகளில் போலி இரகசிய பொலிஸாரினால் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய பொலிஸார் போன்று மாவத்தகம, வாகொல்ல தோட்ட பிரேசத்தில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்ற 3 பேர் கொள்ளையடித்த சம்பவத்தையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணம் வட்டிக்கு வழங்குதல் மற்றும் வர்த்தக நடவடிக்கை மேற்கெள்ளும் நபரின் வீட்டிற்கு சென்ற மூவரும் வர்த்தகர் மற்றும் அவரது மனைவி அணிந்திருந்த 5,600,000 ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய பொலிஸார்
வேனில் வந்த இந்த மூவரும் தாம் இரகசிய பொலிஸார் என கூறியதுடன் கணவன் மனைவி மீது துப்பாக்கியை காண்பித்து கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தி 36 பவுண் நிறையுடன் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட வந்ததாகக் கூறப்படும் நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளையை மேற்கொள்ள வந்த மூன்று கொள்ளையர்களை கைது செய்ய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.