online வேலை தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஒன்லைன் (Online) மூலம் வேலை வாய்ப்பு தருவதாக தெரிவித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஆன்லைனில் வேலை
ஆன்லைனில் வேலை தருவதாக கோடிக்கணக்கில் ருபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரந்தெனிய - தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் 3 வங்கிக் கணக்குகளில் 72 இலட்சம் ரூபா பணம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிருசுவில் படுகொலை வழக்கு....! பொது மன்னிப்பிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி அனுமதி

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
