வடக்கில் பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்: வெளியான தகவல்
வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 1000 பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆசிரியர் பற்றாக்குறை
வடமாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க 1000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுவதுடன் புதிய தொண்டர் ஆசிரியர்களை சேவையில் இணைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் முடிவு கடல் துறை சார்ந்த விடங்களின் அரசாங்கத்தின் இறுதியான முடிவாக இருக்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிருசுவில் படுகொலை வழக்கு....! பொது மன்னிப்பிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி அனுமதி





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
