சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொடர்பில் போலிச் செய்திகள்
சமூக ஊடகங்களில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொடர்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள போலியான செய்திகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்காக அங்கொட தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
எனினும் மருத்துவமனையில் உரிய வசதிகள் இன்மை காரணமாக அவர் சிகிச்சை வசதிகளுடன் வீடு திரும்பிவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
செயற்கை சுவாச கருவி மற்றும் தாதி ஒருவருடன் அவர் வீட்டுக்கு திரும்பிவிட்டதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும் இதனை மறுத்துள்ள சுகாதார அமைச்சு, அமைச்சர் தொடர்ந்தும் அங்கொட தொற்று நோயியில் மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்வதாக தெரிவித்துள்ளது.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
