க.பொ.த சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் போலிச் செய்திகள்
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்குள் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற்றது.
போலியான தகவல்
இந்த நிலையில் குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கடந்த வாரம் முதல் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதி அல்லது ஜுன் மாத நடுப்பகுதிக்குள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், போலிய செய்திகளினால் பரீட்சார்த்திகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுவதால், அவ்வாறான செய்திகளை பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam