பசிலுக்காக பதவியை ராஜினாமா செய்கிறாரா ரஞ்சித் பண்டார? அவரே கூறியுள்ள விடயம்
தமது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவிற்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்கும் நோக்கில் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை ரஞ்சித் பண்டார விட்டுக் கொடுக்க உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
எனினும் இவ்வாறான எந்தவொரு விடயமும் பேசப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பசில் ராஜபக்ச நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.