நிதி அமைச்சராகும் பசில் - பதவி விலக தயாராகும் 3 எம்.பிகள்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஜுலை மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நிதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது 27 அமைச்சர்கள் உள்ளமையினால் மற்றுமொரு அமைச்சர் பதவி பிரமாணம் செய்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டதன் பின்னர் எரிபொருள் விலை குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தற்போது வரையிலும் உயர்மட்ட கலந்துரையாடல்கள் பல இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதற்காக சாகர காரியவசம், ஜயந்த கோட்டேகொட, ரஞ்ஜித் பண்டார ஆகிய மூவரில் ஒருவர் பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam