நாமலுக்காக பொய்யான பிரச்சாரம் - ஆதாரத்துடன் அம்பலமான உண்மை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்காக மாநாடுகளை நடத்தி வரும் சட்டத்தரணி சாகர காரியவசம் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவது ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்கு முந்திய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எந்தவொரு குற்றப்பத்திரிகையும் இன்றி நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் கருத்து வெளியிட்டு வருகின்றார்.
எனினும், ரணில் - மைத்திரிபால ஆட்சிக் காலத்தில் நிதி மோசடிகள் தொடர்பில் நாமல் ராஜபக்ச முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.
பொய்யான குற்றச்சாட்டு
பொதுமக்களிடமிருந்து எழுந்த அழுத்தம் காரணமாகவே அவர் அப்போது கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் காவலில் இருந்தபோது “குரகன் சுவந்த” என்ற பெயரில் கட்டுரை தொடர் அப்போதைய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
நாமல் ராஜபக்சவின் சிறைக் கைதி இலக்கம் 5502 என அந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் அந்த குற்றச்சாட்டுகள் மழுங்கடிக்கப்பட்டு, நாமல் ராஜபக்சவுக்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பாதுகாப்பு தனித்தனியாக வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
you may like this video