பூஸ்டர் தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி தகவல்
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் பொய்யானது என மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரோன் வைரஸ் திரிபினை கட்டுப்படுத்தாது என சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் பிழையானவை என வைரஸ் நோய் தொடர்பிலான நிபுணத்துவ மருத்துவர் ஜூன் ஜயமஹா தெரிவித்துள்ளார்.
அனைவரும் பூஸ்டர் மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் புரதப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் எனவும், இது புதிய திரிபுகளை கட்டுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகள் ஒமிகரோன் திரிபினை கட்டுப்படுத்தாது என்பது வெறும் ஊகங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் தகவல்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபுகள் உருவாவதனை கட்டுப்படுத்த வேண்டுமாயின் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அல்பா மற்றும் டெல்டா திரிபுகள் இலங்கையில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam