பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த போலி மருத்துவர் கைது!
பொலன்னறுவை, தீப உயன பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (05.05.2026) இரவு பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குருநாகல், பன்னலவைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
இவர் ஹிங்குரகொட மருத்துவமனையின் மகப்பேறு விடுதியில் பணிபுரியும் மருத்துவர் எனத் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து மருத்துவக் குழாய் மருத்துவச் சீருடை மற்றும் போலி அடையாள அட்டை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே பொரளை, கண்டி, மினுவாங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களில் பல்வேறு குற்றங்களுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! காலக்கெடுவை நெருங்கும் த.வெ.க விஜய் - பின்னணியில் அவசர பேச்சுவார்த்தைகள்
சிறைத்தண்டனை
அத்துடன், இவர் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலன்னறுவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam