மருத்துவர்களாக நடித்த இருவர் கைது
போலி ஆவணங்களைத் தயாரித்து தம்மை மருத்துவர்களாக காண்பித்து செயற்பட்டு வந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீகலாவ பொலிஸ் பிரிவில் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், குருநாகல் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் ஒத்துழைப்புடன் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்கள்
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மீகலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 62 வயதுடைய மீகலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் குருநாகல் மாவட்ட மருந்துப் பரிசோதனை அதிகாரிகள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மீகலாவ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.