கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டுக்குள் நடந்த பயங்கரம் - மகளுக்கு நேர்ந்த துயரம்
கம்பளையில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகை பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புஸ்ஸல்லாவ பகுதியிலுள்ள வீட்டுக்குள் கூர்மையான கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய 2 கொள்ளையர்கள், கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் அவரது மகளிள் கைகளையும் கால்களையும் கட்டி வைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கோடி 58 லட்சம் ரூபாய் மற்றும் தங்க ஆபரணங்கள், அத்துடன் ஒரு பையில் எண்ணாமல் வைக்கப்பட்டிருந்த பெருந்தொகைபணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
பொலிஸில் முறைப்பாடு
புஸ்ஸல்லாவ நகரில் ஒரு பெரிய மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடையை நடத்தி வரும் பழனியாண்டி சுப்ரமணியம் என்பவரின் வீட்டிலேயே கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக புஸ்ஸல்லாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூரியர் சேவையில் இருந்து வந்திருப்பதாகவும், பொருட்களை வழங்க வேண்டும் என கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
