இலங்கையிலுள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவசர அறிவிப்பு
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) வரும் வாப் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலங்கையின் ஒரு முன்னணி வங்கி சிறப்புப் பரிசு வழங்குவதாகக் கூறும் மோசடியான சமூக ஊடகச் செய்தியால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவு (Sri Lanka CERT) வலியுறுத்தியுள்ளது.
இலங்கை CERTஇன் தகவலின் படி, குறித்த வங்கி அத்தகைய பரிசுச் சலுகை எதையும் அறிவிக்கவோ அல்லது தொடங்கவோ இல்லை.
பரவி வரும் இந்தச் செய்தி, தனிப்பட்ட தகவல்கள், வங்கிச் சான்றுகளின் விவரங்கள் மற்றும் பிற முக்கியத் தரவுகளைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மோசடியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
எச்சரிக்கை

இந்த மோசடிக்கு இரையாகும் தனிநபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் அபாயம் ஏற்படக்கூடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
அந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான இணையதளங்கள் மூலம் தனிப்பட்ட அல்லது வங்கித் தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் இலங்கை CERT பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
விளம்பரச் சலுகைகளை அதிகாரப்பூர்வ வங்கி வழிமுறைகள் மூலம் சரிபார்த்து, இணையவழி மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு