மட்டக்களப்பில் போலி நாணயத்தாள் மோசடி : தப்பிச் சென்ற சந்தேக நபர்
மட்டக்களப்பில், மரக்கறி கொள்வனவு செய்த பின்னர் போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத் தாளை வியாபாரியிடம் வழங்கி விட்டு சந்தேகநபரொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
நேற்றையதினம்(10.01.2026) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - பார் வீதியில், வாகனத்தில் வைத்து மரக்கறிகளை விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
போலி நாணயத்தாள் மோசடி
இந்த சம்பவம் தொடர்பில் வியாபாரி தெரிவிக்கையில், “மரக்கறி வாங்க வந்த நபரொருவர், மரக்கறிகளை கொள்வனவு செய்து விட்டு 5ஆயிரம் ரூபாய் நாணயத் தாளைக் கொடுத்து மிகுதிப் பணத்தை பெற்றுக்கொண்டுச் சென்றார்.
மரக்கறி வாங்க மக்கள் அதிகமாக குவிந்து நின்றதால் நான் அந்த நாணயத்தாளை கவனிக்காமல் மற்றைய தாள்களோடு வைத்து விட்டேன்.

அதன் பின்னர், மற்றுமொரு வாடிக்கையாளருக்கு பணம் கொடுக்க பணத்தை எடுத்த போது 5000 ரூபா நாணயத்தாள் ஒன்று வெறும் பேப்பரில் அச்சிடப்பட்டிருந்த போலி நாணயத்தாள் என்பதை அறிந்தேன்” என மிகுந்த கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மோசடி தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் குறித்த வியாபாரி தெரிவித்துள்ளார்.
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri