EPF பணத்தை ஓய்வூதியமாக பெறும் புதிய திட்டம்: வெளியாகியுள்ள தகவல்
ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) நிலுவையில் உள்ள தொகையினை ஓய்வூதிய அடிப்படையில் பெறுவதற்கான புதிய திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ், ஓய்வூதிய திட்டத்தினூடாக சலுகைகளை வழங்குவதற்கான இந்த திட்டமானது தன்னார்வ விருப்பமாக இருக்குமென தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் முன்னெடுப்பு
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், குறித்த திட்டத்தினூடாக ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பல்வேறு தெரிவுகள் வழங்கப்படவுள்ளன.

திட்டத்தில் அடங்கும் விடயங்கள்
இதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் நிலுவையில் உள்ள தொகையினை முழுமையாக பெற்றுக்கொள்ளல், ஓய்வூதிய அடிப்படையில் நிதியை பெறுதல் உள்ளிட்ட விடயங்கள் இந்தத் திட்டத்தில் அடங்குகின்றன.
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |