சுதந்திரக்கட்சியில் இருந்து விலகிய பைசர் முஸ்தபா
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா அந்த கட்சியின் பதவிகள் மற்றும் அங்கத்துவதில் இருந்து விலகியுள்ளார்.
கட்சியில் இருந்து விலகும் கடிதத்தை தலைமையிடம் ஒப்படைத்த முஸ்தபா
தனது விலகல் தொடர்பாக கட்சியின் தலைமைக்கு விளக்கியுள்ளதுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்ததையின் பின்னர் கட்சியில் இருந்து விலகும் கடிதத்தை கட்சியின் தலைமையிடம் கையளித்துள்ளார்.
கடந்த காலத்தில் பைசர் முஸ்தபாவுக்கும் சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்தன. இதன் காரணமாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை ஏற்படுத்தியதை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் எதிர்த்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிப்போருக்கு வேட்புமனுக்களை வழங்கும் போது அநீதி ஏற்படும் என கட்சிக்குள் குற்றம் சுமத்தப்பட்டது.
இதன் காரணமாக கொழும்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் சுதந்திரக்கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிடுவது என கட்சியின் அரசியல் சபை தீர்மானித்தது என சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
கூட்டணிக்குள் வேட்புமனுக்களை பகிர்ந்துக்கொள்ளும் போது சிக்கல்கள் எழுந்தன எனவும் அவர் கூறியுள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
