உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை.. ஆளுநர் நா.வேதநாயகன் கருத்து
எந்தவொரு உற்பத்தியாளரினதும் உற்பத்திப் பொருட்களுக்குரிய நியாயமான விலை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனவும், இடைத்தரகர்கள் உழைத்துச் செல்வதற்கு இடமளிக்காமல் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும்போதே எமது மாகாணம் முழுமையாகத் தன்னிறைவடைய முடியும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
'வடக்கிற்கான தொழில்துறைகள் மன்றத்தின்' வருடாந்தப் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நோர்த் கேட் ஹோட்டலில் சனிக்கிழமை (21.03.2026) மாலை, மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், தொழில்துறைகளின் நிலையான அபிவிருத்தியின்றி எமது மாகாணம் வளர்ச்சியடைய முடியாது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி என்பது ஏற்றுமதியை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கான உந்துதலை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan