எரிபொருட்களை ஏற்றி வந்த புகையிரத்தில் ஏற்பட்ட தீ! (Photos)
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீட்டர் எரிபொருட்களை ஏற்றி வந்த புகையிரத்தில் ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (18.03.2023)இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன் புறப்பட்ட புகையிரம் இன்று சனிக்கிழமை காலை 09.10 மணியளவில் வெலிக்கந்தை புகையிரதத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

புகையிரதம் புறப்பட்ட இருபது நிமிடத்தில் வெலிக்கந்தை புகையிரத நிலையத்திற்கும் புனானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் 188 வது மைல் கல் அருகில் புகையிரத இயந்திர பகுதியில் தீ பிடித்துள்ள நிலையில் புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவதானித்ததையடுத்து புகையிரத்தை நிறுத்தி பாரிய விபத்தில் இருந்து புகையிரத்தை பாதுகாத்துள்ளனர் என்று புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து மற்றுமொரு புகையிரத இயந்திரத்தை கொண்டு வந்து தீப்பிடித்த புகையிரதரத்துடன் எரிபொருள் அடங்கிய கொள்கலன்களையும் மட்டக்களப்புக்கு மதியம் 12.00 மணியளவில் கொண்டு சென்றுள்ளனர்.

கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri