மஹிந்தவின் அவசர உத்தரவு! வெளியேறும் குடும்பங்கள் (Video)
மழையுடனான சீரற்ற காலநிலையால் அபாய மண்டலங்களில் வசிக்கும் 12,000 குடும்பங்களை உடனடியாக அவ்விடங்களை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டத்தின் போதே பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
கடந்த வாரங்களில் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், தொற்றுநோயால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு சுமார் 31,475 பேரை முகாம்களில் அடைப்பதை விட, அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 15,000 குடும்பங்கள் ஆபத்து வலயங்களில் வசிப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் 3,000 குடும்பங்கள் மட்டுமே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள 12,000 குடும்பங்களை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்த செய்தி தொடர்பாகவும் மற்றும் பல செய்திகள் குறித்தும் விரிவான தகவல்களை சுமந்து வருகின்றது எமது செய்திப்பார்வை விசேட தொகுப்பு,
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri