கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எதிர்கால திட்டம்: முக்கிய இடம்பிடித்த உபவேந்தரின் உரை(Photos)

Eastern University of Sri Lanka Sri Lanka Eastern Province
By Dharu Jan 01, 2024 05:57 PM GMT
Report

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொறியியல் பீடங்கள் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றபோது பிரதான உரையாற்றிய உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால இலக்கு குறித்து புள்ளிவிபர தரவுகள் அடங்கிய உபவேந்தரின் விளக்கம் இந்நிகழ்வில் முக்கிய இடத்தினை பிடித்திருந்தது.

வற் வரி அதிகரிப்பு: மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும்: சிறீதரன் எச்சரிக்கை(Video)

வற் வரி அதிகரிப்பு: மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும்: சிறீதரன் எச்சரிக்கை(Video)

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

“கிழக்குப் பல்கலைக்கழகம் தற்போது இலங்கை பல்கலைக்கழக தரப்படுத்தல் வரிசையில் 12வது இடத்தில் இருப்பதுடன், உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் வரிசையில் 5206 உள்ளது.

இலங்கை பொலிஸாருக்கு உதவ முன்வந்துள்ள கனடா வாழ் பொலிஸ் பிரதானி

இலங்கை பொலிஸாருக்கு உதவ முன்வந்துள்ள கனடா வாழ் பொலிஸ் பிரதானி

சமூக சேவை திட்டம்

இந்தப் பல்கலைக்கழகம் தற்போது 1 வளாகம், 1 நிறுவகம் மற்றும் 10 பீடங்களை உள்ளடக்கி 355 கல்விசார் உத்தியோகத்தர்கள் அடங்கலாக மொத்தமாக 880 ஊழியர்களுடன் சிறப்பாக இயங்குகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எதிர்கால திட்டம்: முக்கிய இடம்பிடித்த உபவேந்தரின் உரை(Photos) | Faculty Of Law Engineering At Eastern Uni

2023ம் ஆண்டில் இது பல்வேறு முக்கிய அடைவுகளை எட்டியுள்ளதுடன், வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிரதான பகுதியில் பட்டப்பின் கற்கைகள் பீடம் நிறுவப்பட்டுள்ளதுடன், திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு திணைக்களங்கள் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படுகின்ற பீடங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு மேலதிகமாக சட்டம், பொறியியல் உள்ளிட்ட பல பீடங்களும், திணைக்களங்களையும் உருவாக்கும் முன்மொழிவுகள் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல்கள் கிடைக்கப் பெற்றதுடன் அவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கிழக்குப் பல்கலைக்கழகமானது கோப் சிற்றி, உளவள ஆலோசனை நிலையம் மற்றும் தொழிநுட்ப பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான பிரத்தியேக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு இந்த மாவட்டத்தில் சமூக சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் இந்தப் பிராந்திய மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முகமாக 'திறந்த தினம்' எனும் பெயரில் பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கான நிகழ்வு நடைபெற்றது.

லிட்ரோவை தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது

லிட்ரோவை தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது

வரலாற்றின் மைல்கற்கள்

பிராந்திய அபிவிருத்தியில் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை பொதுமக்களும் மற்றும் மாவட்டத்தின் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளில் பல்கலைக்கழகத்தின் வகிபாகத்தை மாணவர்களும் நேரடியாக அவதானிக்க வாய்ப்பு இதனூடாக ஏற்பட்டுத்தப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எதிர்கால திட்டம்: முக்கிய இடம்பிடித்த உபவேந்தரின் உரை(Photos) | Faculty Of Law Engineering At Eastern Uni

2023ம் ஆண்டு, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக தரப்படுத்தலில் கிழக்குப் பல்கலைக்கழகம் 'பீ' தரத்தினை பெற்றுக் கொண்டமை மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக விளையாட்டு நிகழ்வை தலைமையேற்று நடாத்தியமை என்பன இந்த பல்கலைக்கழக வரலாற்றில் மைல்கற்கள் ஆகும்.

உலக வங்கி நிதி உதவியின் கீழ் இப்பல்கலைக்கழகத்தில் பல முக்கிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அச்செயற்பாடுகள் உலக வங்கியால் பாராட்டத்தக்க நிலையில் உள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து வெறியேறும் பட்டதாரிகள் பல்வேறு தொழிற்துறைகளில் இணைந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணியாற்றி வருவதுடன், இப்பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளின் வேலையின்மையை குறைக்கும் செயற்பாடுகள் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கல்விச் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு 2023ம் ஆண்டில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டதாகவும், வறிய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் பொருட்டு வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக மாணவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆண்டைய கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளின் முக்கிய அடைவுகளாக இப்பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் 54 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச தளங்களில் வெளிவந்துள்ளதுடன், விஞ்ஞான ஆராய்சிக்கான 3 ஜனாதிபதி விருதுகள் கிடைக்கப் பெற்றதாகவும், இதில் இரு விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக முதுமானி மாணவர் ஒருவருக்கும் விருது கிடைத்துள்ளது.

இப்பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரது ஆராய்ச்சிக்கு சர்வதேச அளவிலாக காப்புரிமை கிடைத்துள்ளது.

நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய்

நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய்

நவீன உலகிற்கு ஏற்றால்போல் தயார்படுத்தல் 

அத்துடன் பனை ஓலையில் எழுதப்பட்ட 27000 கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எதிர்கால திட்டம்: முக்கிய இடம்பிடித்த உபவேந்தரின் உரை(Photos) | Faculty Of Law Engineering At Eastern Uni

பல்கலைக்கழக செயற்பாடுகளை நவீன உலகிற்கு ஏற்றால்போல் தயார்படுத்தல் மற்றும் ஊழியர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் பொருட்டு வெளிநாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் நிதி நிலையைக் கவனத்திற் கொண்டு பல்கலைக்கழக செயற்பாடுகளை குறைந்தளவு நிதிகளைப் பயன்படுத்தி உச்ச அளவிலான அடைவுகளை எட்ட முயற்சித்து வருவதாகிறது.” என்றார்.

பல்கலைக்கழக நிருவாக கட்டிடத் தொகுதியில் ஆரம்பமான இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தேசியக் கொடியினை ஏற்றி வைக்க பதிவாளர் அ.பகிரதன் பல்கலைக்கழக கொடியினை ஏற்றி வைத்தார்.

கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்ற முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, தேசிய கீதத்துடன், போர் வீரர்கள் உள்ளிட்ட தாய்நாட்டுக்கான உயிர்த்தியாகம் செய்த சகலரும் நினைவுகூறப்பட்டனர்.

பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களின் ஆசி உரை வழங்க, பொதுச் சேவை சத்தியப் பிரமாண உறுதி மொழியினை பதிவாளர் நிகழ்த்தி வைத்தார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதில் பிரதி உபவேந்தர், நிதியாளர், பீடாதிபதிகள், நூலகர், சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், திணைக்கள தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US