முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்துச் செய்யப்படுமா..! அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்குள் வரவில்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் இதர சிறப்புரிமைகளையும் குறைப்பதாக நாம் கூறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை சலுகைகளை இரத்துச் செய்வதாகவே கூறியிருந்தோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்வது தொடர்பான பிரேரணை எதிர்வரும் வாரமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
சுகபோகமாக வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தங்குவதற்காக அவர்களுக்கு மாதிவெல குடியிருப்பு தொகுதியில் வீடுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
