திருக்கேதீஸ்வரத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை வழங்க நடவடிக்கை
மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வரத்திற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித அசௌரியங்களும் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருக்கேதீஸ்வரத்தில் நடைபெற இருக்கும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முன்னோடி கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
”திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வருடா வருடம் இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஒன்றுகூடுவது வழமையாகும்.
சிவராத்திரி விழா
இந்த வகையில் இவ்வருடமும் இங்கு சிறப்பாக நடைபெறுவதற்கான ஒழுங்கு முறைகள் திருப்பணி சபையாலும் மாவட்ட செயலகத்தினாலும் மேற்கொள்ளப்படுகின்றது.
இம்முறையும் இந்நாளில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் கலை நிகழ்வுகள் மேள வாத்தியங்கள் இத்துடன் பல்வேறு நிகழ்வுகளும் இங்கு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி சபை மேற்கொண்டுள்ளது.

காலைத் தொடக்கம் அடுத்தநாள் வரை சிவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெறும் விஷேட பூஜைகள் நடைபெறும் இரவு விஷேட லிங்கேஸ்வர பூஜைகள் இரவு நடைபெறும் இதில் ஏளு குருக்கள் ஈடுபடுவர்.
நித்திரை விழித்துக் கொண்டு இருக்கும் பக்கதர்கள் இந்த பூஜையில் விஷேடமாக கலந்து கொள்வர்.
பாலாவியில் தீர்த்தம் ஆடிய பக்தர்கள் அங்கிருந்து நீரைக் கொண்டு வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் முக்கிய நிகழ்வும் நடைபெறும்.
பக்தர்களின் நலன்கருதி இங்கு வரும் சகலருக்குமான அத்தியாவசிய தேவைகள் மன்னார் மாவட்ட செயலக ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும்.
ஆகவே இங்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித அசௌரியங்களும் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.