முகநூல் அழுத்தத்தினாலே போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்றார் அநுர : வெளியான தகவல்
முகநூல் ஊடாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அழுத்தங்கள் காரணமாக...
கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் கிடைக்கப் பெற்ற அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் காரணமாக போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்பதனை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வுகளில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரே பங்கேற்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் பங்கேற்காதிருப்பதனை எதிர்த்து பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி இந்த நிகழ்வில் பங்கேற்ற நேரிட்டது என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவ வழக்கு ஒத்திவைப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
