துபாயில் குழந்தையுடன் சிக்கித் தவிக்கும் இலங்கை பெண்.. நாடு திரும்ப அரசாங்கம் நடவடிக்கை
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த உதவி கோரிக்கையைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கை பெண் மற்றும் அவரது குழந்தை தொடர்பில் வெளியுறவு அமைச்சகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த பெண் பேஸ்புக்கில் காணொளி ஒன்றை பகிர்ந்து, ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சரிடம் நேரடியாக நாடு திரும்ப உதவுமாறு முறையிட்டுள்ளார்.
இதற்கமைய, அதிகாரிகள் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த கணவர்
அந்தப் பதிவில், தனது கணவர் மாரடைப்பால் நீண்ட காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து பின்னர் உயிரிழந்த நிலையில், தன்னால் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேற முடியவில்லை என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவக் கட்டணங்கள் செலுத்தப்படாததால், துபாய் மருத்துவமனை தனது கடவுச்சீட்டை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததாகவும், இதனால் தனக்கும் தனது குழந்தைக்கும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "தற்போது, எனக்கும் சட்ட சிக்கல்கள் உள்ளன, ஏனெனில் நான் எனது பெயரில் தங்குமிடத்தை எடுத்திருந்தேன். மேலும் அதற்கான கொடுப்பனவுகளைச் செலுத்த எனக்கு வழி இல்லை.
இப்போதும் கூட, எனக்கு எந்த தீர்வும் இல்லை. மேலும், என் குழந்தைக்கும் எனக்கும் செல்லுபடியாகும் விசாக்கள் இல்லை, எங்கும் வேலை கிடைக்கவில்லை” என அந்த பெண் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
அத்துடன், அந்தப் பெண், தான் நிதி இழப்பீடு கோரவில்லை, மாறாக இலங்கைக்குத் திரும்புவதற்கு அரசாங்கத்தின் உதவியை மட்டுமே கேட்கிறேன் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் அருண் ஹேமச்சந்திர செய்தியாளர்களிடம், அந்தப் பெண்ணுடன் தான் நேரில் பேசியதாகவும், பின்னர் அவர் இலங்கை தூதரகத்திற்கு முறையான அறிக்கையை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
“எமது அலுவலகம் தற்போது அபுதாபியில் உள்ள எங்கள் பணியகம் மற்றும் தொடர்புடைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்த விடயத்தைக் கையாள்கிறது.
இதனால் குறித்த பெண் மற்றும் அவரின் குழந்தை, முறையான அதிகாரப்பூர்வ வழிகளில் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்” என்று துணை அமைச்சர் கூறியுள்ளார்.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam