டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் 2023ஆம் ஆண்டு வரை முடக்கம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டராகிராம் பக்கங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை தழுவினார்.
இதனையடுத்து ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்கா நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றன.
எனினும் ட்ரம்ப் தமது அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளாத அவர் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றினார்.
பின்னர் அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். இந்தநிலையில் அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கெப்பிட்டல் கட்டிடத்திற்குள் பிரவேசித்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்கள் ட்ரம்பின் கணக்குகளை முடக்கின . வன்முறை சம்பவத்தை தொடர்ந்து ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது.
எனினும் , பேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக தடைவிதித்தது. இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை
முடக்கப்பட்டுள்ளது. , பேஸ்புக் நிறுவனம் விதித்த தடை குறித்து கருத்து
தெரிவித்துள்ள ட்ரம்ப், இது தனக்கு வாக்களித்தவர்களுக்கு செய்யப்பட்ட
அவமரியாதை எனக்கூறியுள்ளார்.