ஹோமாகம பகுதி மக்களை உடனடியாக முகக்கவசம் அணியுமாறு பொலிஸார் அறிவிப்பு
ஹோமாகம கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்களை உடனடியாக முகக் கவசம் அணியுமாறு பொலிஸார் அறிவித்துள்ளது.
ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக வாயு ஒன்று சுற்றுச்சூழலில் கலக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீப்பிடித்த குறித்த தொழிற்சாலையில் திருத்த பணிகள் இடம்பெற்று வரும் வேளையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் வாயு புகையாக காற்றில் கலந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிவாயு கசிவு
சுற்றுச்சூழலில் குளோரின் வாயு கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாலை 5.30 மணியளவில் எரிவாயு கசிவைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் புகைமூட்டம் பரவி வருவதால் ஹோமாகம கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹோமாகம பொலிஸார் கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்களுக்கும் அறிவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri