முகங்களை மூடிய ஆடைக்கு தடை! - மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள முகங்களை மூடிய ஆடைகளுக்கான தடை நாட்டின் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிந்திய தாக்குதலாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்ச்சி கங்குலி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த யோசணைக்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த ஏப்ரல் 27 ம் திகதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கு இலங்கையின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் மற்றும் புர்கா போன்ற ஆடைகள் சட்டவிரோதமாக்கப்படும்.
அத்துடன் அவர்களுக்கான சமூக ஓரங்கட்டலை அது அதிகரிக்கும் எளவும் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இந்த ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முயற்சியால் விலக்கிக்கொள்ளப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் அந்த நிலைமை ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் மீனாட்சி கங்குலி தெரிவித்திருக்கிரார்.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam