முகநூல் தொடர்பில் 23ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் முகநூல் தொடர்பில் 23,534 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணினி அவசர பதிலளிப்பு அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியியலாளர் சாருக் கெமுனுபொல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 70 வீதமான முறைப்பாடுகள் பெண்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்ய முடியும்
வேலை வாய்ப்பு பெற்று தருவதாக இணைய வழியில் இடம்பெற்ற மோசடிகளே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பிரமிட் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மோசடிகளும் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலியான முகநூல் கணக்கு உருவாக்கியமை, முகநூல் கணக்குகளை ஹேக் செய்தமை உள்ளிட்ட முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் மொத்தமாக 3328 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
