வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை
வடக்கு மாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் நேற்றையதினம் (07.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேியே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“சர்வதேச பார்வை தினத்தினை முன்னிட்டு, யாழ். போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவில் 2,000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்யவுள்ளோம்.
யாழ். போதனா வைத்தியசாலையில் குறுகிய காலத்தில் கண்புரை சத்திர சிகிச்சை முகாமை நடத்துவது இது மூன்றாவது தடவை. வடக்கு மாகாணத்தில் இது நாலாவது தடவையாகும்.
இலங்கையில் மாத்திரம் இன்றி, சார்க் வலய நாடுகளில் கூட "பேகோ" மூலம் இப்படியான சத்திர சிகிச்சை முகாம்கள் நடந்ததில்லை. வடக்கிலையே இவ்வாறான கண்புரை சத்திர சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |